கணவனை பழி வாங்க இளம் மனைவி மீது அசிட் தாக்குதல்
ஹொரணையில் இடம்பெற்ற அசிட் தாக்குதலில் 29 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த பெண் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதன் காரணமாக ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரு தரப்புக்கு இடையில் மோதல்
எனினும், தகராறு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண் எந்தவிதத்திலும் தலையிடவில்லை என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது ஒருவருக்கு தாக்கப்பட்டமையே இந்த சம்பவத்திற்கு காரணமாகும். பின்னர், தாக்குதலுக்கு உள்ளான நபர், தன் மீது தாக்குதல் தாக்கிய நபரின் வீட்டிற்கு அசிட் போத்தலையும் எடுத்துச்சென்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபர் வீட்டில் இல்லாத காரணத்தினால், குறித்த நபரின் மனைவியின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது.
அசிட் தாக்குதலை மேற்கொண்ட நபர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை ஹொரணை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஹொரணை பகுதியைச் சேர்ந்த 30, 28 மற்றும் 27 வயதுடைய மூவராகும்.
சந்தேகநபர்களை ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10