விபத்தில் பலியான இளம் பெண்
சிலாபம் - முந்தல் கோயில் சந்திப் பிரதேசத்தில் முச்சக்கர வண்டி வேம்பு மரத்தில் மோதியதில் அதில் பயணித்த 24 வயதான யுவதி மரணமடைந்துள்ளதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.
முந்தல் கோயில் சந்தி வில்பெத்த பகுதியை சேர்ந்த 24 வயதான குணரத்ன அபேசிங்க முதியன்சலாகே அஞ்சலி ருவன்திமா பியுமந்தி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
யுவதி தனது சகோதரன் மற்றும் தாயாருடன் நுவரெலியா பிரதேசத்திற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யுவதியின் வீட்டுக்கு மிக அருகில் கோயில் சந்தியில் இந்த விபத்து நடந்துள்ளது. முச்சக்கர வண்டியை யுவதி சகோதரர் ஓட்டியுள்ளார்.
அவருக்கு நித்திரை மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வேம்பு மரத்தில் மோதியுள்ளது.
விபத்தில் யுவதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். யுவதியின் சகோதரரும் தாயும் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரணமடைந்த யுவதி வெளிநாடு ஒன்றில் தொழில் புரிந்து வந்ததாகவும் யுவதியும் சகோதரரும் தாயுடன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri