தற்போதைய ஆட்சியில் விரக்தியடைந்து, நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள்
இலங்கையில் சராசரியாக நான்கு பேரில் ஒருவர், சந்தர்ப்பம் கிடைக்குமாயின் நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர், வெளிநாடு செல்லும் நோக்குடன் கடவுச் சீட்டை பெற்றுக்கொள்ளக் காத்திருப்பது தொடர்பில் ஐபிசி தமிழ் கள ஆய்வினை மேற்கொண்டு செய்தி வெளியிட்ட நிலையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
சுகாதார கொள்கைகள் தொடர்பான நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் அச்சமூட்டுவதுடன், படித்த இளைஞர்கள் மத்தியில் நாட்டை விட்டு வெளியேறும் விருப்பம் 50% ஆல் உயர்வடைந்துள்ளது.
அறிக்கைக்கு அமைய, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 34 வீதமான ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முழுமையான விருப்பத்தைக் கொண்டுள்ளதோடு, அவர்களில் 24 வீதமானோர் ஏற்கனவே அதற்காக திட்டமிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
மேலும் 20 வீதமானோர் இன்னும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. நாட்டில் 22 வீதமான பெண்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகின்றனர்.
மேலும் அவர்களில் 22 வீதமானவர்கள் இதற்காகத் திட்டமிடுவதுடன், மேலும் 12 பேர் அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
கடந்த 3 - 5 வருடங்களில் இலங்கையர்கள் மத்தியில் வெளிநாடு செல்வதற்கான அபிலாஷைகள் இரட்டிப்பாகியுள்ளதாக அந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
உயர்கல்வித் தகுதி பெற்ற பலர் தற்போதைய ஆட்சியில் விரக்தியடைந்து, நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கணக்கெடுப்பின்படி, சராசரியாக உயர்தரம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு 2.6 வீதமாக ஆக உள்ளது, அதேவேளை நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களின் தொகை 10.2 வீதத்தால் உயர்வடைந்துள்ளது.
அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம் இந்த ஆய்வுகளுக்கு, இலங்கை கருத்து கண்காணிப்பு ஆய்வு முறையைப் பயன்படுத்தியது.
கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து நாடு மீண்டு வருவதால், பொதுமக்களின் கருத்தை மதிப்பிடுவதற்கு இந்தக் கணக்கெடுப்பு முறை பயன்படுத்தப்பட்டது.
தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்காகக் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்பதாக, பிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்த கருத்தை இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் உறுதிப்படுத்துவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாடு செல்வதில் இளைஞர்களே அதிக ஆர்வம் காட்டுவதாகப் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்து சரியானது எனக் கணக்கெடுப்பு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேறுவதற்குப் பொருளாதாரத்தின் மீதான அவநம்பிக்கையான பார்வை, கொவிட்-19 ஒழிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை மீதுள்ள அதிருப்தி, விரக்தி என்பவற்றை முக்கிய ஆதாரங்களாக ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர், ஒரு
வருடத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமடையும் என எதிர்பார்ப்பதாகக்
கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
