பெற்றோரை பார்க்க சென்ற குடும்பம் - இளம் தாய், குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
காலி - கொழும்பு வீதியில் பட்டம் ஒன்றில் இருந்த நைலோன் நூல் மோட்டார் சைக்கிளில் சிக்கியமையினால் அதில் பயணித்த தாய் மற்றும் ஒன்றரை வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளனர்.
மேலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் 6 வயதுடைய சிறுவன் காயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி - கொழும்பு பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பட்டம் ஒன்றில் இருந்த நைலோன் நூல் வீதி பக்கத்தில் காணப்பட்டதனால் அதனை கையில் எடுத்து அங்கிருந்து நீக்க முயற்சித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு அதனை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள் வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது குடும்பத்திருடன் பெற்றோரை பார்ப்பதற்காக பயணித்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்த ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 34 வயதுடைய தாய் மற்றும் ஒன்றரை வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளது.
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan