இளம் தாய் மற்றும் சிசு உயிரிழப்பு: விசாரணை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்
மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் பொழுது மரணித்த தாய் மற்றும் சிசு தொடர்பில் உரிய விசாரணையை நடாத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் வைத்தியசாலை தொடர்பில் அச்சமடைந்திருக்கும் மக்களின் அச்சத்தைப் போக்குமாறும் அவர் சம்பந்தபட்ட தரப்பினருக்கு அறிவுருத்தியுள்ளார்.
இதேவேளை இவ்வாறான அசாதாரண சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாமல் உரியவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதுடன் மக்களுக்கு உயரியதும் பாதுகாப்பானதுமான சேவை கிடைப்பதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மன்னார் வைத்தியசாலை
மன்னார் வைத்தியசாலையில் அண்மைக்காலமாக பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாய்மார் இறந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளமை கவலை அளிக்கிறது என்றும் மஸ்தான் கூறியுள்ளார்.
மேலும். நோயாளர்கள் தங்களது மருத்துவ தேவைகளுக்காக வைத்தியசாலைக்கு செல்வதற்கு அச்சமடைந்திருப்பதாகவும் அறிய முடிகிறது.
நடந்த சம்பவம் தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் காதர் மஸ்தான் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
