பிரித்தானியாவில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞர்!வெளியான புதிய தகவல்
பிரித்தானியாவில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞர் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியா - லண்டனின் Ilford-ல் உள்ள Harrow சாலையில் கடந்த 28 ஆம் திகதி இளைஞரொருவர் கொடூரமான முறையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், தற்போது உயிரிழந்த இளைஞர் தொடர்பில் சில விபரங்கள் வெளியாகியுள்ளதுடன்,உயிரிழந்த நபரின் புகைப்படமும் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 28 ஆம் திகதி கம்ரான் கலித் (Kamran Khalid) என்றழைக்கப்படும் 18 வயது மதிக்கத்தக்க இளைஞரே இவ்வாறு அடையாளம் தெரியாத நபர்களின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனொருவர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,அவர் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan