விசுவமடு வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்
விசுவமடு றெட்பான சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
றெட்பான சந்திப்பகுதியில் உள்ள வீதித்தடை பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விசுவமடுவில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி உந்துருளியில் பயணித்த இளைஞன் கப்வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளாகிய நிலையில் மூங்கிலாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகப் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு வீதிப்போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் வீதி சோதனை நடவடிக்கைக்காக வீதித்தடைகள்
போடப்பட்டுள்ளமையால் போக்குவரத்து செய்வதில் பயணிகள் பெரும் சிரமங்களை
எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
