வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞன் பலி
மட்டக்களப்பு (Batticaloa) தலைமைக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மாமாங்கம், பாடசாலை வீதியை சேர்ந்த 26 வயதுடைய ரஞ்சித் விசிதன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விசாரணைகள் முன்னெடுப்பு
கூழாவடி, மாமாங்கேஸ்வரர் ஆலய வீதியில் உள்ள ஒப்பந்தகாரர் ஒருவர் அவரது வாகனங்களை வீதியில் நிறுத்தி வைத்திருந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தற்போது மட்டக்களப்பில் மழைபெய்துவரும் நிலையிலும் குறித்த வாகனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பகுதி இருளாகவுள்ள நிலையிலும் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாரிய வாகனங்களை ஏற்றிச்செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனத்திலேயே மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது குறித்து கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
