யாழில் சுவாசிக்க சிரமப்பட்ட 23 வயதுடைய இளம்பெண் உயிரிழப்பு
சுவாசிப்பதில் சிரமப்படுவதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் நேற்றைய தினம்(10.01.2026) யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ரவீணா எனும் 23 வயதுடைய இளம்பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இளம் பெண் உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளம்பெண் கடந்த 31ஆம் திகதி சுவாசிப்பதில் சிரமப்பட்டுள்ளார். அதன் பின்னர், கடந்த 1ஆம் திகதி காலை கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, 3ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இருப்பினும், குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்(11.01.2026) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri