வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப மரணம்
வவுனியா - வடக்கு, மதியாமடு பகுதியில் உழவியந்திரம் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம்(18.04.2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் நேற்று மாலை தனது அத்தியாவசியத் தேவை ஒன்றின் காரணமாக உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்றுள்ளார்.
இதன்போது, எதிர்பாராத விதமாக உழவியந்திரம் கட்டுப்பாட்டை இழந்து திடீரெனத் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: தயார் நிலையில் படைகள் - ஈரானின் உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தின்போது உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த புளியங்குளம் பொலிஸார், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam