திருமணமாகி ஒரு மாதத்தில் விபத்தில் பலியான இளைஞன்
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் சீனக்குடா இராணுவ முகாமிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் இராணுவ லொறியில் மோட்டார் சைக்கிள் மோதுண்ட நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கிண்ணியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் பலி
லொறியை ஓட்டிச் சென்ற இராணுவ கோப்ரல் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் திருகோணமலை சேர்ந்த 29 வயதான ராஜ்கபூர் ரஷீக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞன் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்த நிலையில் உயிரிழந்துள்ளமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சீனக்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri