பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளாதவரா நீங்கள்? இதோ முக்கிய அறிவிப்பு (Video)
உலகில் வாழும் மனிதன் ஒருவனுக்கு, நிலையான, உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணமே பிறப்புச் சான்றிதழ்.
இந்த பிறப்புச் சான்றிதழ், பிறந்தவுடன் பெற்றுக்கொள்ளப்படும் நிலையில் மனிதன் ஒருவன் இறக்கும் வரை பயன் தருகிறது. பாடசாலை, தொழில், திருமணம் உட்பட்ட பல விடயங்களுக்கும் பிறப்புச்சான்றிதழ் அத்தியாவசியமானதாகும்.
இந்தப்பிறப்புச் சான்றிதழ், நாடுகளுக்கு நாடு வித்தியாசப்படுகின்றது. அந்த வகையில் இலங்கையில் ஒரு மனிதனுக்கு பிறப்புச் சான்றிதழ் பல்வேறு வியடங்களில் உதவுகிறது.
பாடசாலை, அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சொத்து உரிமை ஆகிய விடயங்கள் இதில் முக்கியமானவை. இந்நிலையில், பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளும் வழிகள் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பில் இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிறப்பு பதிவு
வீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
பிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் கிராம அதிகாரிக்கு அறிவிக்கவும்.
கிராம அதிகாரியினால் பிறப்பு பற்றிய அறிக்கை பிரதேச பதிவாளருக்கு அறிவிக்கப்படும்.
பிறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும்.
சரியாக பூரணப்படித்தப்பட்ட பிரதிக்கினை பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு பெற்று தரவும். பிரதிக்கினை பதிவாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
தந்தை, தாய், பிறப்பு நிகழ்ந்த பொழுது அருகில் இருந்த நபர், பாதுகாவலர்
பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும். பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்கு பின் பிறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடிவதுடன் அதற்காக காலங்கடந்த பிறப்பினை பதிவு செய்தல் விபரத்தினை பார்க்க.
தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
கிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
பிறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும்.
பிறப்பு நிகழ்ந்தது கிராமிய வைத்திய சாலையிலாயின், அப்பிரதேசத்தில் உள்ள பதிவாளருக்கு பிறப்பினை பதிவுசெய்வதற்கு அறிவிக்கவும்.
பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
தந்தை தாய் பிள்ளை பிறந்த நேரம் அங்கு இருந்த நபர் வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளவும்.
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை. பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.
பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும். தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
மேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்.
பொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
பிறப்பினை பதிவு செய்வதற்காக பிறப்பு நிகழ்ந்த பொது வைத்திய சாலையில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவுசெய்யும் பதிவாளருக்கு அறிவிக்கவும்.
பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
தந்தை தாய் பிள்ளை பிறந்த நேரம் அங்கு இருந்த நபர் வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக் கொள்ளவும்.
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள், சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை.
பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை. 03 மாத கால எல்லைக்குள் பிறப்பினை இலவசமாக பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
மேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்.
தனியார் வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளரால் பிறப்பு பதிவுசெய்யப்படுகிறது.
பிறப்பு தனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்தால் அத்தகையை பிறப்பை அப்பிரதேச பதியவாளருக்கு அறிவித்தல்.
பிறப்பைப் பற்றிய தகவல்களை வழங்க பொருத்தமான நபர்கள் தந்தை தாய் பிறப்பு நிகழ்ந்தபோது சமூகமளித்திருந்த நபர் அந்த வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி பிறப்பை அறிவிப்பதற்காக பிறப்பு, இறப்பு பதிவாளரிடமிருந்து தகுந்த வெளிப்படுத்தல் படிவத்தைப் பெற்றுக்கொள்ளுதல்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சரியாகப்
பூர்த்திசெய்யப்பட்ட வெளிப்படுத்தல். பிறப்பு நிகழ்ந்தததை நிரூபிப்பதற்கு வைத்தியசாலையிலிருந்து வழங்கப்பட்ட ஆவணம்.
பிறப்பு நிகழ்ந்து 3 மாதங்களுக்குள் பிறப்பை இலவசமாகப் பதிவுசெய்துகொள்ள முடியும்.
பிறப்புச் சான்றிதழ் பிரதியொன்று தகவல் அளிப்பவருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளரைச் சந்திக்கவும்.
பதிவுசெய்யப்பட்ட தோட்டத்தில் நிகழந்த பிறப்பை பதிவுசெய்தல்
பிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் தோட்ட அதிகாரிக்கு அறிவித்தல் தகவல் அளிக்க வேண்டிய நபர்கள் தந்தை தாய் பிறப்பின்போது சமூகமளித்திருந்த ஒரு நபர் தோட்ட அதிகாரி விண்ணப்பத்தை சான்றுப்படுத்தி மாவட்ட மருத்துவ அதிகாரி ஊடாக பிரதேச செயலாளர் ஊடாக அனுப்பிவைப்பார்.
மாவட்ட பதிவாளரால் பிறப்பு பதிவுசெய்யப்பட்டு பிறப்புச் சான்றிதழ் தோட்ட அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்படும். தகவல் அளித்தவர் தோட்ட அதிகாரியிடமிருந்து பிறப்புச் சான்றிதழை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
வெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்
" நிரந்தர இலங்கை பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளின் பிறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
பிறப்பினை பதிவுசெய்வது பிறப்பு நிகழ்ந்த நாட்டில் உள்ள நிரந்தர இலங்கை தூதுவர்/ நிரந்தர இலங்கை உயர் ஆணையகத்தில் ஆகும்.
பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள், தந்தை தாய் பிள்ளையின் பாதுகாவலர் பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை நிரந்தர இலங்கை தூதுவர் / நிரந்தர இலங்கை உயர் ஆணையகத்தில் பெற்றுக்கொள்ளவும்.
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள், சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு உரிய ஆவணங்கள் 03 மாத கால எல்லைக்குள் பிறப்பினை இலவசமாக பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும். வெளிநாட்டில் பிறப்பு நிகழ்ந்து, பிறப்பு பதிவுசெய்யப்படாத தற்பொழுது நிரந்தரமாக இலங்கைக்கு வந்திருக்கும் நபரின் பிறப்பினை பதிவு செய்துக்கொள்ள முடியும்.
அதற்காக தேவையான தகவல்கள் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மத்திய பதிவேட்டறையின் உதவி பதிவாளர் நாயகம் அவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் தொலைலபேசி இலக்கம்: +94 112 329 773 or +94 112 433 075