இணையத்தில் உலக ரீதியாக அதிகம் தேடப்பட்ட 10 சொற்கள்
கூகுளில் 2022ஆம் ஆண்டு உலகளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் முதலிடம் பெற்றுள்ள 10 வார்த்தைகளை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கூகுளில் நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் விளையாட்டு தொடர்பான சொற்களே அதிகம் இடம்பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் இருப்பதால், கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகில் அதிகம் தேடப்பட்ட சொற்கள்
அதில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில், வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடம் பிடித்துள்ளது. இது இணைய வார்த்தை விளையாட்டு.
உலகளவில் அதிக அளவிலான மக்கள் இந்த சொல்லை கூகுளில் தேடியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியா - இங்கிலாந்து (India vs England) சொல் உள்ளது.
கடந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட உக்ரைன் போரால், உக்ரைன் எனும் சொல் 03 ஆவது இடம் பிடித்துள்ளது.