இலங்கையில் விரைவாக உயரும் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை - உலக சுகாதார மையம் வலியுறுத்தியுள்ள விடயம்
இலங்கையில் தினசரி கோவிட் நோய்த் தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை விரைவாக உயர்வதை தொடர்ந்து கோவிட் வைரஸ் எழுச்சியை தீவிரமாக எடுத்து கொள்ளுமாறு உலக சுகாதார மையம் வலியுறுத்தியுள்ளது.
இந்த பிரச்சினை இலங்கையை பொறுத்தவரையில் சவாலான அத்தியாயம் என உலக சுகாதார மையத்தின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி ஒலிவியா நிவேரஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு மற்றும் முன்னிலைப் பணியாளர்கள் கோவிட் வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கடும் கிரயத்தனத்தில் ஈடுப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தை பொறுத்தவரையில் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் கோவிட் வைரசை கட்டுப்படுத்துவதற்கும் தேவையான உதவிகளை வழங்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் சன நெரிசலான இடங்களை தவிர்த்தல் மற்றும் நெருங்கிய தொடர்புகளை குறைத்தல் என்பன கோவிட்வை குறைக்கும் வழிகளாகும்.
எனவே இந்த வழிகளை பின்பற்றி 2ஆம் உலக யுத்தத்தின் பின்னர் கடுமையான பின் விளைவை ஏற்படுத்தி வரும் கோவிட்வை கட்டுப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்றும் உலக சுகாதார மையத்தின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி ஒலிவியா நிவேரஸ் கோரியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
