உலக சுகாதார தினம்: யாழ். ஆரோக்கிய நகர செயற்திட்டம் மீதான ஓர் பார்வை!
உலக சுகாதார தினமானது ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்ட தினமான ஏப்ரல் 7ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினமானது அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியம் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நிறுவனமாகும் . இது உலகின் பொதுச் சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் ஒன்றாகும். உலக சுகாதார தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளினை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.
இக் கருப்பொருளானது பிரதானமாகத் தற்காலத்தில் உள்ள சுகாதார பிரச்சினைக்கான ஓர் கவனத்தையும் விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதைக் கொண்டிருக்கும்.
சனத்தொகை மற்றும் வளர்ச்சி
அந்த வகையில் இந்த வருடம்" அனைவருக்கும் சுகாதாரம்" என்ற கருப்பொருளினை மையமாகக் கொண்டுள்ளது . ஒரு நாட்டின் சுகாதாரத்திற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தி வருகின்றது .
அந்த நாட்டில் உள்ள நகரங்கள் பொதுவாக முக்கிய பங்கினை வகித்து வருகின்றது. குறிப்பாக இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் நகரங்கள் ஒரு முக்கிய பங்காகும்.
ஏனெனில் அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் வளர்ச்சி அடைந்துவரும் உட் கட்டமைப்பு வசதிகள் என்பன முறையான சுகாதாரத்தை அணுகுவதற்குத் தடையாக இருக்கின்றது. உலக சுகாதார ஸ்தாபனமானது பல தசாப்தங்களாக ஆரோக்கிய நகரங்களை உருவாக்குவதில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனம்
அந்த வகையில் உலக சுகாதார ஸ்தாபனதின் ஆரோக்கிய நகரத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆரோக்கிய நகரம் என்பது பௌதிக மற்றும் சமூக சுழலினை மேம்படுத்திக் கொள்வதோடு அங்கு வாழும் மக்கள் தமது திறன்களை வளர்த்துக்கொண்டு ஓர் ஆரோக்கியம் மிக்க வாழ்க்கையைத் தாமாக ஏற்படுத்திக் கொள்வதற்கு வழிப்படுத்துவதொன்றாகும்.
இச்செயற்திட்டமானது பல்வேறு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு கணிசமான ஆரோக்கிய நகரங்களை அடையாளப்படுத்தியுள்ளது.
இச்செயற்திட்டமானது யாழ் மருத்துவ பீடத்தின் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவ அலகின் நேரடி ஒருங்கிணைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலில் யாழ் மாநகர சபை, சுகாதார சேவைகள் திணைக்களம் , யாழ் மாவட்ட செயலகம், யாழ் பிரதேச செயலகம், மாகாண கல்வி திணைக்களம். மேலும் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதான ஒத்துழைப்புடன் “யாழ் ஆரோக்கிய நகரத் திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
நோய்களுக்கான தடுப்பு
இத் திட்டமானது 5 பிரதானமாக கருப்பொருட்களான கழிவு முகாமைத்துவ மேம்பாடு, போசாக்கான உணவு மேம்பாடு, உடல் மற்றும் உள ஆரோக்கிய மேம்பாடு, நீர் மற்றும் சுகாதார மேம்பாடு அத்துடன் தொற்றா நோய்களுக்கான தடுப்பு என்பவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
இது 3 சுற்றுச் சூழல்களான பாடசாலை, பொது இடங்கள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில் பாடசாலைகளில் கழிவு முகாமைத்துவ சுகாதார மேம்பாட்டிற்கு பிளாஸ்டிக் பாவனை அற்ற பாடசாலையை உருவாக்குவதற்காக பயிற்சிப் பட்டறைகளை இத்திட்டம் மேற்கொண்டு வருகின்றது.
துவிச்சக்கர வண்டி விழிப்புணர்வு
யாழ் மாநகர சபைக்குள் அடங்கும் 23 பாடசாலைகளில் எமது பயிற்சிகளை நடாத்தி உள்ளோம். மேலும் நீர் மற்றும் சுகாதார மேம்பாட்டின் கீழ் பாடசாலைகளில் பெண் மாணவர்களுக்கான மாதவிடாய் சுகாதாரம் எனும் பயிற்சிப் பட்டறையினை வழங்கி வருகின்றோம்.
மேலும் சில அது தொடர்பான கற்றல் புத்தகங்களை உருவாக்கி விநியோகித்து வருகின்றோம். உடல் மற்றும் உள ஆரோக்கிய மேம்பாட்டிற்காகப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் துவிச்சக்கர வண்டி பாவனையை அதிகரிப்பதற்காகக் கடந்த வருடம் துவிச்சக்கர வண்டி விழிப்புணர்வு பயணம் ஒன்றை நடத்தித் தொடர்ந்து அதனை மேம்படுத்துவதற்காக மாணவர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணிப்பதற்கான சூழலை உருவாக்குவதில் ஆர்வமாகச் செயற்பட்டு வருகின்றோம்.
மேலும் பாடசாலை தோட்டம் என்ற எண்ணக்கரு ஊடாக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். பாடசாலையில் மாணவர்களின் போசணையை அதிகரித்துக் கொள்ளச் சுகாதாரமான சிற்றுண்டிச் சாலைகளை உருவாக்குவதற்கு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
ஆரோக்கியத்தின் பாதை
இவ்வாறு நாம் எமது ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளைப் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். எமது இச் செயற்பாடுகளை அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மேற்கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.
நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் மூலம் மட்டுமே எமது நகரை ஓர் ஆரோக்கியம் மிக்க நகராக மாற்ற முடியும் . எம் ஒவ்வொருவரின் எமது நகரை ஆரோக்கியத்தின் பாதையில் கொண்டு செல்வத்துக்கான சிறிய முயற்சியும் எமது நகத்தின் ஆரோக்கியமான பயணத்திற்கு வழிவகுக்கும்.
ஆரோக்கியமான மக்கள் , ஆரோக்கியமான நகரம், ஆரோக்கியமான நாடு

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
