உணவுப் பற்றாக்குறையுடன் இருக்கும் இலங்கை மக்கள்! உலக உணவுத் திட்டம்

Food Shortages Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Sri Lanka Food Crisis Sri Lanka Fuel Crisis
By Sivaa Mayuri Jul 07, 2022 03:10 AM GMT
Report

இலங்கையில் சுமார் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையுடன் இருப்பதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்ட அறிக்கையின்படி, இலங்கை மக்கள் பொருளாதார மற்றும் உணவுநெருக்கடிகளின் சுமைகளை தொடர்ந்து உணர்கிறார்கள்.

உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்கள்

10 குடும்பங்களில் 3 குடும்பங்கள் (6.26 மில்லியன் மக்கள்) உணவுப் பாதுகாப்பற்றவர்கள், அவர்களில் 65,600 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர்.

2022 ஜூனில் உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அத்துடன் தொடர்ந்து அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலைகள், போதுமான மற்றும் போசனை உணவு திறனை முடக்கியுள்ளது.

உணவுப் பற்றாக்குறையுடன் இருக்கும் இலங்கை மக்கள்! உலக உணவுத் திட்டம் | World Food Programme Report

பெரும்பாலான குடும்பங்கள் (61 சதவீதம்) குறைந்த விருப்பமான மற்றும் குறைவான சத்துள்ள உணவை உண்பது மற்றும் உண்ணும் உணவின் அளவைக் குறைப்பது போன்ற உத்திகளை பயன்படுத்துகின்றன.

பெருந்தோட்டத்துறை மக்கள்

ஐந்தில் இரண்டு குடும்பங்கள் போதுமான உணவுகளை உட்கொள்வதில்லை. பேருந்தோட்டத்துறையில் வாழும் மக்களிடையே உணவுப் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது, அங்கு பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளன.

உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் சமாளிக்கும் உத்திகளின் அனைத்து நடவடிக்கைகளிலும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை விட, பெருந்தோட்ட குடும்பங்கள் தொடர்ந்து மோசமான விளைவுகளைக் கொண்டுள்ளன.

நகர்ப்புற குடும்பங்கள் இப்போதைக்கு சமாளிப்பதற்கு சேமிப்பைக் குறைக்கும் அதே வேளையில், பெருந்தோட்ட மக்கள் ஏற்கனவே உணவு மற்றும் பிற தேவைகளுக்காக கடன் பெறுகின்றனர்.

உணவுப் பற்றாக்குறையுடன் இருக்கும் இலங்கை மக்கள்! உலக உணவுத் திட்டம் | World Food Programme Report

சுமார் 200,000 குடும்பங்கள் அவசரகால வாழ்வாதாரத்தை சமாளிக்கும் உத்திகளைப் பயன்படுத்துகின்றன, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

ஜூன் மாதத்தில் மொத்த பணவீக்கம் 54.6 சதவீதமாக உள்ளது, இது 1954 க்குப் பிறகு மிக அதிகமானது என கணிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உணவுப் பாதுகாப்பு, விவசாயம், வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் உலக உணவு திட்டம் குறிப்பிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US