உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை- தாழையடி கடற்கரையில் சிரமதானம்
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை பிரதேச சபையால் தாழையடி கடற்கரை சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை பிரதேச சபையானது கடந்த 30 ஆம் திகதியில் இருந்து பல்வேறு சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளை செய்து வருகின்றது.
சிரமதானம்
இதன் அடிப்படையில் இன்று காலை 9 மணியளவில் பருத்தித்துறை பிரதேச சபையின் செம்பியன் பற்று உப கிளையானது கரையோர வலயங்களை தூய்மைப்படுத்தும் எனும் தொனிப்பொருளில் தாழையடி பிரதான கடற்கரை சிரமதானம் செய்யப்பட்டது.
இந்த சிரமதான பணியில் செம்பியன்பற்று உப அலுவலக பொறுப்பதிகாரி மற்றும் வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மருதங்கேணி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தாழையடி கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








