உலக ஓவியப்போட்டியில் இலங்கை சிறுமி முதலிடம்
ஜப்பானில் உள்ள யுனிசெப் அலுவலகமும், ஜப்பான் தரச்சான்றிதழ் அலுவலகமும் இணைந்து நடத்திய 23 ஆவது சர்வதேச சிறுவர் ஓவியப்போட்டியில் இலங்கை சிறுமி முதலிடம் பெற்றுள்ளார்.
புத்தளத்தில் உள்ள தேசிய பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பி மலிஷா நிர்மலி (15) என்ற சிறுமியே முதலிடம் பெற்றுள்ளார்.
6 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் “இயற்கையை நேசிக்கும் குழந்தைகள்” என்ற தலைப்பில் இந்த ஓவியம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலாம் இடம்
இந்த போட்டியில் உலகின் 83 நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான சிறுவர்கள் சமர்ப்பித்த ஓவியங்களில் இலங்கை முதலாம் இடத்தைப்பெற்றுள்ளது.
பிறப்பிலிருந்தே கலையில் திறமை வாய்ந்த நிர்மலி 2023 ஆம் ஆண்டு உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை நடத்திய கலைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
மேலும், தேசிய அளவிலான பல கலைப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
காலியில் உள்ள இலங்கை சிறுவர் கலை நிலையத்தின் பணிப்பாளர் பியசேன டி சில்வாவின் வழிகாட்டலின் கீழ் இலங்கையிலிருந்து சிறுவர்கள் இந்த கலைப் போட்டிக்கு ஓவியங்களை சமர்ப்பித்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |