கிராம அபிவிருத்தி குழு தலைவர் நியமன விவகாரம்: பிரதேச சபை தவிசாளர்கள் குற்றச்சாட்டு

Jaffna Sri Lanka Politician NPP Government
By Theepan Dec 17, 2025 10:12 AM GMT
Report

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை வலுவிழக்கச்செய்து மக்களின் ஜனநாயக பிரதிநிதிகளை செயற்படவிடாமல் தடுப்பதற்கு, தேசிய மக்கள் சக்தி கிராம அபிவிருத்தி குழு தலைவர் என்ற பதவியை பிரதேச செயலாளர் ஊடாக நியமனக்கடிதம் மூலம் நியமிக்கப்படுவதாக பிரதேச சபை தவிசாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிரஜா சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறி முழு நாட்டையும், முழு கிராமத்தின் அதிகாரங்களையும் தேசிய மக்கள் சக்தியிடம் இழுக்கும் நோக்கில் இந்த அரசியல் நியமனம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் பேரிடரால் ஏற்பட்ட பெரும் நட்டம்! அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

இலங்கையில் பேரிடரால் ஏற்பட்ட பெரும் நட்டம்! அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்,

உள்ளூராட்சி மன்ற சட்டங்களின் பிரகாரம் ஒரு நியாயமான தேர்தல் மூலம் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக அதிகாரம் வழங்கப்பட்ட கட்சி சார்பு கிராம மட்ட தலைவர் ஒருவரை நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

கிராம அபிவிருத்தி குழு தலைவர் நியமன விவகாரம்: பிரதேச சபை தவிசாளர்கள் குற்றச்சாட்டு | Workers Warning To Government Officials

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், உள்ளூராட்சி மன்றங்களை மலினப்படுத்தி சர்வாதிகார ஆட்சியை கொண்டு பலப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தியினர் போட்ட திட்டமே கிராம அபிவிருத்தி குழு.

இலங்கை வரலாற்றில் அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்களுடாக தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த வரலாறுகள் மாறி தேசிய மக்கள் சக்தியினர் கிராமங்களில் தமது அரசியலை மேற்கொள்வதற்காக உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்த முயல்கின்றனர்.

குறித்த நியமனம் தொடர்பில் நாம் விரிவாக ஆராய்ந்து நீதிமன்றத்தை நாடுவதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுப்போம் என தெரிவித்துள்ளார் .

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச அதிகாரிகளை தவறாக வழி நடத்தும் செயற்பாடு கிராம அபிவிருத்திக் குழு தலைவர் நியமனம். ஒரு பிரதேச செயலாளர் ஊடாக அந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தி குழு தலைவரை அமைப்பதற்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், குறித்த நியமனத்தை வழங்கும் அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது சவாலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயம்.

அரசியல் நியமனங்கள் அதிகாரிகளை மேற்கொள்ளச்செய்யும் அடக்குமுறையான ஆட்சியில் அரச அதிகாரிகள் காணப்படுகின்றார்கள். ஆகவே குறித்த விடயம் தொடர்பில் தவிசாளர்களுடன் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஊர்காவற்துறை தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா,

கடந்த கால ஆட்சிகளை விட மோசமான முறையில் மக்களை ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயற்பாடு கிராமமட்ட அபிவிருத்தி குழு தலைவர். இந்த நியமனம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரின் சிபாரிசின் பெயரில் நியமிக்கப்படுகின்றார்.

இதன்கீழ் கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி குழு உத்தியோகத்தர் கடமையாற்ற வேண்டிய இக்கட்டான நிலையை பிரதேச செயலாளரின் கடிதம் பிரதிபலிக்கிறது. அது மட்டும் அல்லாது உள்ளூராட்சி மன்றங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் பங்குபெறுவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சியின் சிபாரிசினால் பிரதேச செயலாளரால் நியமிக்கப்படுகின்ற கிராம அபிவிருத்தி குழு தலைவர் அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு பங்குபடுத்துவதற்கான சந்தர்ப்பம் பிரதேச செயலாளரினால் வழங்கப்படுகின்றது.

இது உள்ளூராட்சிமன்ற அதிகாரங்களை பெற்ற மக்கள் பிரதிநிதிகளை புறம்தள்ளி ஒரு கட்சி சார்ந்த பிரதிநிதிக்கு அங்கீகாரம் வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் கிராம அபிவிருத்தி குழு தலைவரின் நியமன கடிதத்தில் நியமிக்கப்படுபவர் அரச உத்தியோகத்தராக கருதப்படமாட்டார் என கூறிவிட்டு, அடுத்த பந்தியில் சமூக அபிவிருத்திக் குழுக்களை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம மட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்ட கிராம உத்தியோகத்தரை புறந்தள்ளி அரசியல் அதிகாரங்களை கிராம மட்டங்களில் பலப்படுத்துவதற்கான தேசிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டமே இந்த கிராம அபிவிருத்தி குழு திட்டம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

விவசாய ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு

விவசாய ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கையில் பண பாவனை தொடர்பில் எச்சரிக்கை - 20 வருடம் சிறைத்தண்டனை

இலங்கையில் பண பாவனை தொடர்பில் எச்சரிக்கை - 20 வருடம் சிறைத்தண்டனை


GalleryGallery
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US