மரணித்த மாவையிடம் இருந்து உதிர்ந்த வார்த்தைகள்!
யாழ். மாவட்டத்திற்கு அரசியல் பணிக்காக போராளிகள் வருகை தந்தபோது தமிழ்ரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் அரசியல் பணி பாராட்டத்தக்கது என சட்டத்தரணி உமாகரன் ராசையா தெரிவித்துள்ளார்.
மாவை சேனாதிராஜாவின் அரசியல் பயணம் தொடர்பில் அவர் வெளிப்படுத்திய முகநூல் பதிவிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில்,
சமாதான காலம்
“இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் சமாதான காலகட்டத்தில், யாழ் மாவட்டத்திற்கு அரசியல் பணிக்காக போராளிகள் வருகை தந்து, மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு பின்னர் தீவகத்திலும் அரசியல் பணி மேற்கொள்வதற்காக அரசியல் பணிமனையை ஆரம்பிப்பதற்காக தயார்படுத்தலை மேற்கொண்டோம்.
முதன் முதல் இரண்டு பேருந்துகளில் தீவகம் நோக்கி பயணித்தோம்.
அரசியல் துறை பொறுப்பாளர் இளம்பருதி அண்ணா மற்றும். பாப்பா அண்ணா தலைமையில் சமகால அரசியல் போராளிகள் தீவாகத்திற்கு சென்றிருந்தோம்.
எங்களோடு மாவை ஐயாவும் சிவாஜிலிங்கம் ஐயாவும் வருகை தந்தார்கள்.
அன்று தமிழ் தேசியம் சார்ந்த பல அரசியல் தலைவர்கள் இருந்த பொழுதும் இவர்கள் இருவரை மட்டும் பிரத்யோகமாக எங்களோடு அழைத்துச் சென்றோம்.
இதன்போது அல்லைப்பிட்டி சோதனை சாவடியில் எங்களை தடுத்து நிறுத்தி விட்டார்கள்.
அந்தச் சோதனை சாவடியில் இருந்த இராணுவ அதிகாரி எங்களுக்கான அனுமதியை தரவில்லை. எங்களை பயமுறுத்தும் விதமாக இராணுவத்தினரின் செயல்பாடுகள் இருந்தன எங்களை சுத்தி வளைத்து விட்டார்கள்.
கண்காணிப்பு குழு
30 நிமிடங்களை கடந்து அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தன. மாவை ஐயாவும் சிவாஜிலிங்கம் ஐயாவும் எங்களை வாகனத்தில் இருந்து இறங்க விடவில்லை. இறங்கிச் சென்ற மாவை ஐயா இராணுவத்தினருடன் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தார்.
அவர் அன்று ஆக்ரோஷமாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். கூறிய வார்த்தைகள் இன்றும் எனக்கு நினைவில் இருக்கின்றன. ஆயுதம் இல்லாமல் குப்பியோடு வந்திருக்கிறார்கள் என்று உங்களுடைய வீரத்தை காட்டாதீர்கள் என சத்தமாக கத்தி பேசினார்.
உடனடியாக போர் நிறுத்த கண்காணிப்பு குழு மற்றும் 512 ஆவது இராணுவ தளத்தின் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.
அவர்கள் வருகை தந்த பின்னர் எங்களுடைய பயணம் தொடர்ந்தது.
மீண்டும் பயணம் ஆரம்பித்ததும் மாவை ஐயாவின் துணிவை அரசியல் துறை பொறுப்பாளர் பாப்பா அண்ணா பாராட்டினார் குயிலன் அண்ணாவும் மாவை ஐயாவை பார்த்து நீங்கள் சரியான கோபக்காரர் போல் தெரிகிறது ஐயா என்றார்.
மேலும் ஒரு நிகழ்வை பதிவு செய்கிறேன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் அறியாத விதத்தில் கண்காணிக்கப்பட்டு கொண்டிருந்தார்கள்.
இதற்காக பிரத்யோகமாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு இருந்தது. பல படையணிகளை சார்ந்த போராளிகள் உள்வாங்கப்பட்டிருந்தார்கள்.
அண்ணளவாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அறிக்கை தயார் செய்யப்பட்டு கொண்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவுகள் சிறப்பாக இருந்தன. சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஜோசப்பரராஜசிங்கம் ஐயாவுக்கு அடுத்ததாக அதில் மாவை ஐயாவும் ஒருவர்.
மாவைக்கு பாராட்டு
நான் குறிப்பிடும் தகவல்கள் சமாதான காலகட்டத்தின் தகவல்கள். தரவுகளை சேகரித்து அறிக்கை தயார் செய்த போராளிகளுக்கு மத்தியில், அறிக்கைகளை பார்வையிட்ட பின்னர் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அண்ணன் பாராட்டிய ஒருவரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை ஐயாவும் ஒருவர்.
தரவுகள் அறிக்கையின் பிரகாரம் அதிக விமர்சனத்திற்கு உட்பட்ட ஒருவர் சம்பந்தன் ஐயாவாக இருந்தார்.
2009 யுத்தம் முடிவின் இறுதி காலகட்டமும் யுத்த முடிவின் பின்னர் அவருடைய இறுதி பதினைந்து ஆண்டுகளில் அவருடைய அரசியல் வாழ்வில் சில விமர்சனங்களை சந்தித்தாலும் தமிழ் மக்களுக்காக 50 ஆண்டுகளை கடந்த அரசியல் பயணம் பல தடவை மக்களின் பிரதிநிதியாக இனத்திற்காக பல ஆண்டுகள் சிறையில் வாழ்ந்த ஒரு அரசியல் தலைவர் மாவை ஐயா. அவருடைய ஆன்மா இளைப்பாறட்டும் பிரார்த்தித்துக் கொள்வோம்” என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![உக்ரைனுக்கு எதிராக போரிட்ட மொத்த வடகொரிய வீரர்களும் என்ன ஆனார்கள்... வெளிவரும் புதிய தகவல்](https://cdn.ibcstack.com/article/9b4fd7bf-8b71-4232-b4fc-6ae46c94a274/25-67a1eba61ccf3-sm.webp)
உக்ரைனுக்கு எதிராக போரிட்ட மொத்த வடகொரிய வீரர்களும் என்ன ஆனார்கள்... வெளிவரும் புதிய தகவல் News Lankasri
![Rasipalan: 365 நாட்களுக்கு ஒருமுறை வரும் ராஜயோகம்- வெற்றியும், செல்வமும் குவிய போகும் 3 ராசிகள்](https://cdn.ibcstack.com/article/d0a2e0a2-0539-4263-9080-a7e4326fa1dd/25-67a263127e5e7-sm.webp)