மாத்தறையில் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் மகளிர் தின நிகழ்வு
மாத்தறை - தெனியாய பிரதேசத்தில் பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் மகளிர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.03.2024)கொட்டபுட பிரதேச சபை கொட்டபுட தெனியாய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மகளிர் தின நிகழ்வு
பெரும் தோட்டதுறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் முதல் நிகழ்வாக மாத்தறை தெனியாய நகரில் ஆரம்பித்து கொட்டகோல பிரதேசசபை மண்டபம் நோக்கிய மகளிர் பேரணி சென்று கொட்டபுட தெனியாய மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
இதன்போது கலைநிகழ்வுகள், விருந்தினர்கள் உரைகள் என்பன இடம் பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மக்கள் குரல் அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.