நள்ளிரவில் நடந்த பயங்கரம் - வீடொன்றுக்குள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண்
காலியில் குடும்ப பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்தேகம, சந்தரவல பகுதியிலுள்ள இரண்டு மாடி கட்டடத்தின் மேல் தளத்தில் தனியாக தங்கியிருந்த பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசர இலக்கத்திற்கு தகவல்
கட்டடத்தின் கீழ் மாடியில் அமைந்துள்ள மின் சாதனங்கள் பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளர் 119 என்ற அவர அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதற்கமைய, கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.
உயிரிழந்த பிரியஞ்சலி ரத்னா மல்காந்தி என்ற 48 வயதுடைய திருமணமான பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சம்பவம் குறித்து பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri