கொழும்பில் பிரபல திரையரங்கிற்குள் திடீரென உயிரிழந்த பெண்
கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் கழிப்பறையில் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 15, ஜம்பட்டா வீதியில் வசிக்கும் 70 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் தனது குடும்ப உறுப்பினர்களுடன் திரைப்படம் பார்ப்பதற்காக திரையரங்கிற்கு வந்திருந்த நிலையில், கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

தமிழர்களை வெட்டுவேன் என்ற அம்பிட்டிய தேரருக்கு பகிரங்க சவால்! முடிந்தால் நாடாளுமன்ற மைதானத்திற்கு வரவும்
திடீரென உயிரிழப்பு
அங்கு அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார், மாரடைப்பு காரணமாக அவரது மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, திரைப்படம் பார்க்க வந்த குடும்பத்தினரிடம் வாக்குமூலம் பெற்று, சடலத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
