சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது (Photos)
மோட்டார் சைக்கிள் மூலம் 54 போத்தல் சட்ட விரோத மதுபாணத்துடன் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட விசுவமடு புண்ணை நீராவி பகுதியில் இன்று (26.03.2023) அதிகாலை காவல் கடமையில் ஈடுபட்ட பொலிஸாரின் வீதிச்சோதனையில் போது பொதிசெய்யப்பட்ட சட்டவிரோத மதுபானம் கண்டறியப்பட்டது.
சந்தேக நபர் பிணையில் செல்ல அனுமதி
இதன்போது கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 54 போத்தல் சட்டவிரோத மதுபானம் மற்றும் அதை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன தருமபுரம் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பொழுது பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி .எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
