கிளிநொச்சியில் பெண் உட்பட இருவர் கைது
கிளிநொச்சியில்(Kilinochchi) இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் நேற்றையதினம்(06) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு(Vavuniya) வருகை தந்த மோட்டர் சைக்கிள் ஒன்றில் இருந்து 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இருவர் கைது
இதனையடுத்து அதில் பயணித்த 36 வயதுடைய பெண் ஒருவரும், அவரது சகோதரர் எனக் கூறப்படும் 30 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து இரண்டு இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக ஓமந்தைப் பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
