கனடா ஆசை காட்டி பாரிய மோசடியில் ஈடுபட்ட பெண்
கனடா உட்பட பல நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
மஹரகம பகுதியில் Global Educare Consultancy என்ற பெயரில் மாணவர் விசா பெற்றுத்தரும் நிறுவனம் ஒன்றை குறித்த பெண் நடத்தி வந்துள்ளார்.
வேலை ஒப்பந்தங்கள்
இந்த நிறுவனத்தின் மறைவில் பாரிய வேலைவாய்ப்பு மோசடியை சந்தேக நபரான பெண் செய்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் எந்தவித முறையான அனுமதி அல்லது உரிமம் இன்றி இயங்கி வந்த இந்த நிறுவனம், அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டது.
அங்கிருந்து பல வேலை ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பெண் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை ஏப்ரல் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.