வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் திடீரென உயிரிழப்பு
மதுரங்குளிய - முக்குத்தொடுவாவ பிரதேசத்தில் நோய்களை குணப்படுத்துவதாக கூறப்பட்ட இடத்தில் வழங்கப்பட்ட நீரை பருகிய பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
நீர்ச்சத்து குறைபாடு மற்றும் கடுமையான சுவாச கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முந்தலம,வில்பொத்த பகுதியைச் சேர்ந்த ரேணுகா இந்திரகாந்தி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெளியான காரணம்
இவர் கடந்த 35 வருடங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இவர், கடைசியாக துபாயில் பணிபுரிந்து வந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு பணிபுரிந்து சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு நாடு திரும்பிய குறித்த பெண் சில மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததால் குணமடைய இந்த இடத்திற்கு சென்றதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது போத்தல்களில் அடைக்கப்பட்ட சில தண்ணீர் வகைகளை குடிக்கக் கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் உடல் நிலை மோசமாகி அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
