பொலிஸாரின் குறி தவறியதால் பலியான இளம்பெண் - தாயார் வெளியிட்ட தகவல்

Sri Lanka Police Anuradhapura Death
By Murali Oct 04, 2022 01:22 AM GMT
Report

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு தொடரப்படும் என உயிரிழந்த இளம் பெண்ணின் தாய் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தனது மகள் இரேஷா ஷியாமலிக்கு இழப்பீடு வழங்கக் கோரி எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தாயாரட தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் குறி தவறியதால் பலியான இளம்பெண் - தாயார் வெளியிட்ட தகவல் | Woman Was Killed Due To The Police S Misdirection

அனைத்தையும் முடித்து வைக்க பொலிஸார் முயற்சி

சாலையில் செல்லும் போது இதுபோன்று இன்னொருவர் உயிரிழக்காமல் இருக்க, தன் மகளுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் தான் உள்ளிட்ட அனைவரும் தாங்க முடியாத வேதனையில் இருப்பதாகவும், என்ன செய்தாலும் இறந்த மகளை மீட்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பேருந்தில் பயணம் செய்த மகளின் மீது துப்பாக்கிச் சூடு பட்டது குறித்து மன்னிக்கவும் என்று கூறி அனைத்தையும் முடித்து வைக்க பொலிஸார் முயல்வதாகவும், ஆனால் இந்த செயலால் தனது குடும்பத்தினர் வேதனைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது மகளின் இறுதிக் கிரியைகளின் பின்னர் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இரேஷாவின் தாயார் சுனேத்ரா ஜயமான்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி

இதேவேளை, அண்மையில் கொள்ளையர்கள் இருவர் தங்கோவிட்ட நகரில் உள்ள மதுபானசாலையை உடைத்து கொள்ளையிட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது பொலிஸாருடன் பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.

பொலிஸாரின் குறி தவறியதால் பலியான இளம்பெண் - தாயார் வெளியிட்ட தகவல் | Woman Was Killed Due To The Police S Misdirection

அவ்வேளையில், அவ்வீதி ஊடாக அரச பேருந்தில் பயணித்த 29 வயதுடைய பெண்ணொருவரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். 29 வயதுடைய இரேஷா ஷியாமலி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்தார்.

அனுராதபுரத்தில் உள்ள ஆலயமொன்றுக்கு சென்று பூஜையில் கலந்து கொண்டு, களனி பிரதேசத்திலுள்ள தனது சகோதரனுடன் பேருந்தில் வீடு திரும்பியபோதே காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அவர் உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US