பல்பொருள் அங்காடியில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்! பொலிஸார் வழங்கியுள்ள அறிவுறுத்தல்
பல்பொருள் அங்காடிகளிலோ அல்லது வேறு கடைகளிலோ பொருட்களைத் திருடும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தாது அவர்களைப் அருகில் உள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா கேட்டுக்கொண்டுள்ளார்.
பொருட்கள் திருட்டு குறித்து விசாரணை நடத்த பொலிஸார் இருக்கும் போது, பொருட்களை திருடிய குற்றத்திற்காக யாரையும் தாக்க முடியாது என்றும், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு யாரையும் தாக்க எவருக்கும் உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பல்பொருள் அங்காடிகளின் முகாமையாளர்கள் அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.

மலேசியாவில் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! விசாரணையில் வெளியான தகவல்
பொலிஸார் வழங்கியுள்ள அறிவுறுத்தல்
பொரளை கோட்டா வீதியிலுள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் யுவதி ஒருவரை ஊழியர்கள் குழுவொன்று தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும், தாக்குதல் சம்பவத்தை மன்னிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடைகளில் யாரேனும் பொருட்களை திருடிச் சென்றதாக சந்தேகம் ஏற்பட்டால், அவர்களை தாக்குவது சிறந்த வழி அல்ல என்றும், பணியாளர்கள் இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவித்து அந்த நபரையோ பெண்ணையோ பிடித்து பொலிஸார் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஹன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டதாகவும், அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த பெண் போதைப்பொருள் பாவனைக்காக பொருட்களை திருடியுள்ளதாகவும், கடைகளில் பொருட்களை திருடியமை தொடர்பில் இவருக்கு எதிராக பல வழக்குகள் உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய தமிழர்! குடியரசு கட்சியின் வேட்பாளர் கருத்து கணிப்பு வெளியானது

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
