யாழில் திடீரென மயங்கிய பெண் உயிரிழப்பு!
யாழில் திடீரென மயங்கி விழுந்த பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(27) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - கொட்டடி பகுதியைச் சேர்ந்த தியாகராசா பிரேமநளினி (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதன்போது அவருக்கு திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டது. இதனால் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு கொண்டு சென்றவேளை அவர் மயக்கமுற்றார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
உடற்கூற்று பரிசோதனை
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri