யாழில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் பெண் திடீர் மரணம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரே நேற்றையதினம் (23.06.2024) உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் திகதி திடீர் காய்ச்சல் ஒன்று ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் தொடர்ந்தும் நீடிக்க 22ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகள்
இதனையடுத்து, நேற்று அவரின் உடல்நிலை மோசமாகி மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு, மேலதிக பரிசோதனை நடவடிக்கைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
