மெக்சிகோவில் பழங்கால தொடருந்துடன் செல்பி எடுக்க முயன்ற பெண் பரிதாபமாக பலி
மெக்சிகோவில்(Mexico) பழங்கால நீராவி தொடருந்து முன் செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கனேடிய பசிபிக் கன்சாஸ் சிட்டியை (CPKC) உருவாக்கிய நட்புரீதியான இணைப்பைக் கொண்டாடும் விதமாக 1930ஆம் ஆண்டில் 'பேரரசி' எனப்படும் ஒரு நீராவி இன்ஜின் கொண்ட தொடருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
பேரரசி தொடருந்து
இந்த பழங்கால தொடருந்து கடந்த ஏப்ரல் மாதம் கால்கரியில் இருந்து புறப்பட்டு கனடா, அமெரிக்கா வழியாக மெக்சிகோவுக்கு பயணித்துள்ளது.
இந்நிலையில், பேரரசி தொடருந்து மெக்சிகோவில் நுழையும்போது ஹிடால்கோ பகுதி அருகே பலரும் புகைப்படம் எடுப்பதற்காக கூடியுள்ளனர்.
இதன்போது, தனது மகனுடன் வருகை தந்த இளம்பெண் ஒருவர் பேரரசி தொடருந்து முன்பு செல்பி புகைப்படம் எடுக்க முயன்றபோது தொடருந்தின் எஞ்சின் இளம்பெண்ணின் தலையில் மோதியுள்ளது.
இதனை தொடர்ந்து, பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |