இந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்த பெண் மற்றும் இரண்டு பிள்ளைகள்
இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கை வந்து, புத்தளம் பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த பெண் ஒருவரும், அவரது இரண்டு பிள்ளைகளையும் சுகா
தார துறையினர் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த பெண்ணுடன் வந்த மற்றுமொரு பெண் தொடர்பான தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.
இதனிடையே இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கை வரும் நபர்களை தடுக்க கடற்படையினர் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை இலங்கை மீனவர்கள், கடலில் இந்திய மீனவர்களுடன் நெருங்கிய செயற்படுவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட் வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளதன் காரணாமாக மக்கள் இந்தியாவின் எல்லை ஊடாக அயல் நாடுகளுக்கு தப்பிச் செல்வதாக கூறப்படுகிறது.
இந்தியாவுடன் நில எல்லைகளை கொண்டுள்ள நாடுகள் தமது எல்லைகளை மூடியுள்ளன.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan