அரசாங்கம் இன்னும் சிறிது நாளில் வெடித்து சிதறிவிடுமோ? : சந்தேகிக்கும் ராஜாங்க அமைச்சர்
அரசாங்கம் செயற்படும் விதத்தை பார்க்கும் போது இன்னும் சிறிது நாளில் அரசாங்கம் வெடித்து சிதறி விடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க(Vidura Wikcramanayake)தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பயணம் தொடர்பாக உண்மையில் கவலையடைவதாகவும் இவ்வாறு பயணிக்கும் போது புதிய தரப்பினரிடம் ஆட்சி அதிகாரம் செல்லும் என உணர்வதாகவும் விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான நிலைமையை எதிர்பார்த்தா கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் மாற்றத்தை உருவாக்கினோம் என்ற கேள்வி எழுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே விதுர விக்ரமநாயக்க இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri