பிரதமரையும் கைது செய்யுமா அரசாங்கம்? சாணக்கியனின் கேள்வி
நான் தலைவர் பிரபாகரனின் படத்தினை முகநூலில் பிரசுரித்து அதில் பிரதமரையும் இணைத்து பிரசுரித்தால் பிரதமரையும் இந்த அரசாங்கம் கைது செய்யுமா என்பதை அரசாங்கத்திடம் கேட்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சாணக்கியன் பார்வையிட்டார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மோகனை பார்வையிட்டு அவரின் நிலைமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியுள்ளார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சாணக்கியன், தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான முகநூல் ஊடாக அவரின் பெயரையும் இணைத்து(ரக்)பிரசுரித்த காரணத்தினால் கைதுசெய்து விசாரணை செய்வதாக சொல்லப்பட்டுள்ளது.
முகநூலில் ஒருவரை ஒருவர் இணைத்து(டக் செய்து) பிரசுரித்தது என்பதற்காக கைது செய்யப்பட்ட விடயம் என்பது இந்த அரசாங்கத்தின் மிகவும் கேவலமான விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளது. இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் நடைபெருகிறது.
நாட்டில் குண்டு வெடிப்பிக்கு காரணமாய் இருந்த சாரா என்ற பெண்மணியை கூட இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் இந்த பொலிஸ், முகநூலில் ஒருவர் டக் செய்தார் என்று கூறி ஒருவரை கைது செய்து விசாரணை செய்வது என்பது மிகவும் கீழ்தனமான விடயம்.
இது இந்த அரசின் இயலாமையை மறைக்க செய்யப்படும் வேலைத்திட்டம். நான் நாளைய தினம் தலைவர் பிரபாகரனின் படத்தை முகநூலில் பிரசுரித்து பிரதமருக்கு டக் செய்தால் நீங்கள் பிரதமரை கைது செய்வீர்களா? இங்கு கைது செய்யப்பட்டுள்ள மோகனின் குற்றச்சாட்டு விடுதலை புலிகள் தொடர்பானவையை டக் செய்ததாக. நாளை அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் டக் செய்தால் அவர்களை கைது செய்வீர்களா? இது தமிழ் மக்களை அடக்கும் ஒரு செயற்திட்டமாகத்தான் நான் பார்க்கிறேன்.
அரசியல் ரீதிகாக தமிழ் பேசும் மக்களை அடக்கும் வேலைத்திட்டமாக நான் இதை பார்க்கிறேன். இந்த அரசு இவரான வேலைத்திட்டங்களை உடன் நிறுத்த வேண்டும். கொரோனாவால் மக்கள் பாதிப்படைந்து இருக்கும் போது மக்களுக்கு சிகிச்சைக்கு ஒரு ICU BED எடுக்க வசதி இல்லாத அறிவில்லாத இந்த அரசாங்கம் இவ்வாறாக தமிழர்களை அடக்க முயற்சி எடுக்க கூடாது என்பதை தெரிவிக்கிறேன்.
இதை மிக வன்மையாக கண்டிக்கிறேன். இது தொடர்பாக பொலிசுக்குரிய அமைச்சர் சரத் வீரசேகர அவர்களை சந்திக்க உள்ளேன்.உடனடியாக மோகன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இது தொடர்ந்தால் இந்த அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் நாம் செய்யவேண்டி வரும். வட கிழக்கு மலையகத்தில் தமிழ் இளைஞர்களை கைது செய்கின்றனர்.
அண்மையில் மாவீரர் தினத்தில் கைது செய்த இளைஞர்களை எந்த வித விசாரணை இல்லாமல் சிறையில் வைத்துள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் சோபனன் என்ற இளைஞன், கிண்ணையடியை சேர்ந்த ஊடகவியலாளர் கோகிலன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு இதுவரையில் எந்தவித விசாரணைகளும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக அரசாங்கம்
தொடர்ந்து செயற்படுமாகவிருந்தால் பாரிய போராட்டங்களை நாங்கள்
முன்னெடுக்கவேண்டிய நிலையேற்படும் என குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
