1989 ஆம் ஆண்டு ஆட்சி போன்று ஸ்டாலின் ஆட்சியும் கலைக்கப்படும்? எச்சரிக்கும் ஹெச்.ராஜா
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க பிளவுப்படாமல் இருந்திருந்தால் தி.மு.க தற்போது ஆட்சியை கைப்பற்றியிருக்காது என காரைக்குடி பா.ஜ.க தேசிய அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தற்போது தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க ஆட்சிக்கு எனது வாழ்த்துக்கள்.100 நாட்களுக்கு நான் தி.மு.க ஆட்சியினை விமர்சிக்கப்போவதில்லை.காரணம் ஸ்டாலின் கூறியது போன்று 100 நாட்களில் மக்கள் பிரச்சினைகளை சீர்செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுக்கின்றேன்.
அன்று எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க பிளவுப்பட்டதால் 1989 இல் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார் .அதேபோல் இன்றும் அ.தி மூ.க பிளவுப்பட்டதன் காரணமாகவே தி.மு.க தற்போது ஆட்சிக்கு வந்தது.எதிரியின் பலவீனத்தால் மாத்திரமே ஆட்சிக்கு வந்துள்ளனர்.
ஆனால் எல்லை தாண்டி இந்தியாவினுடைய பிரச்சினைகள் இலங்கைக்கு செல்கின்றது என்பதற்காகவே அன்று தி.மு.க வின் - கருணாநிதி ஆட்சி சந்திரசேகர் அவர்களால் கலைக்கப்பட்டது, எனக் கூறி அது போன்று நடவடிக்கை எடுபடுவதற்கு எடுக்கப்படலாம் என மறைமுகமாக ஊடகங்கள் முன் கூறியுள்ளார்.
தி.மு.க தற்போது ஆட்சிக்கு வந்து விட்டது. இவர்களின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது நேற்று மற்றும் நேற்று முன்தினம் மதுரையில் அம்மா உணவகத்தில் பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்திலிருந்து தெளிவாக விளங்கியுள்ளது.
மேலும்,ப.சிதம்பரம் போன்ற மோசடிக்காரர்களை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தும் வரை நானும் அரசியலில் இருப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
முதல் கோணல் முற்றும் கோணல் என்பதனை தெளிவாக விளங்கிக்கொள்ளுமாறு ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
You My Like This Video
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 23 மணி நேரம் முன்
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri