இலங்கைக்கு தேவை ஒரு லீ குவான் யூ ரணில் மாறுவாரா?

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe
By Dias Jun 02, 2022 01:24 PM GMT
Report
Courtesy: கட்டுரையாசிரியர்: மூத்த பத்திரிகையாளர் வீ.தேவராஜ்

 'கோட்டா கோ கம' என்பது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பம் அவர்களுடன் இணைந்த ஆளும் வர்க்கம் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

ஊழல் மோசடிகள் அற்ற புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்படல் வேண்டும் என்ற கருத்தியலில் கட்டியெழுப்பப்பட்டதாகும்.

இது இலங்கைக்கான பொதுவான கருத்தியலாக பொதுவில் பேசப்பட்டபோதும் உண்மையில் 'கோட்டா கோ கம'வில் குடியேறி இருக்கின்ற இளைஞர் யுவதிகள் மற்றும் இவர்களைத் தத்தெடுத்துக் கொண்டுள்ள தென்னிலங்கை மக்களுமே இந்தக் கருத்தியலுக்கான சொந்தக்காரர்களாகும்.

இலங்கைக்கு தேவை ஒரு லீ குவான் யூ ரணில் மாறுவாரா? | Will Sri Lanka Need A Lee Kuan Yew

ஏனெனில் வழமையாக தென்னிலங்கையில் முன்வைக்கப்படும் அரசியல் கருத்தியல்கள் நடைமுறையில் தென்னிலங்கையை நோக்கியதாவே அமைவது வழமை.

2010 ஆம் ஆண்டு அதாவது போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து நல்லாட்சி குறித்த அரசியல் கருத்தியல் முன்வைக்கப்பட்டது.

தமிழர்களுக்கு சரத் பென்சேகாவும் மகிந்த ராஜபக்சவும் ஒன்று தானே

இலங்கைக்கு தேவை ஒரு லீ குவான் யூ ரணில் மாறுவாரா? | Will Sri Lanka Need A Lee Kuan Yew

அவ்வேளையில் கொழும்பில் ஒரு பிரபல ஜந்து நட்சத்திர ஹோட்டலில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடனான ஊடக சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு தமிழ் ஊடகவியலாளர் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும். அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென உரத்துக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். இதனைக் கவனித்த ஒரு பெரும்பான்மை இன சிரேஷ்ட ஊடகவியலாளர் என்னிடம் தமிழ் ஊடகவியலாளர் என்ன கூறுகின்றார் எனக் கேட்டார்.

நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன். அதனைக் கேட்ட அந்த ஊடகவியலாளர் 'எங்களுக்கு நல்லாட்சி வேண்டும். அதற்காக நாம் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றோம். தமிழர்களுக்கு சரத் பென்சேகாவும் மகிந்த ராஜபக்சவும் ஒன்று தானே.இருவருமே தமிழர்களுக்கு எதிராக போரிட்டவர்கள்தானே' என்று குறிப்பிட்டார்.

இலங்கைக்கு தேவை ஒரு லீ குவான் யூ ரணில் மாறுவாரா? | Will Sri Lanka Need A Lee Kuan Yew

அதாவது நல்லாட்சி என்பது கூட அந்த ஊடகவியலாளரின் பார்வையில் 'அது அவர்களுக்கானதாக தென்னிலங்கைக்கு உரியதாகவே' பார்க்கப்பட்டது.

இதே நிலைமை தான் இன்றும். 'கோட்டா கோ கம' அரசியல் கருத்தியல் நடைமுறைக்கு வருமாயின் அது தென்னிலங்கைக்கு ஏற்பவே வடிவமைக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்திருக்காது.

அதே வேளையில் 'கோட்டா கோ கம' அரசியல் கருத்தியலுக்கு மாறாக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கி 'ராஜபக்சர்களின் பொதுஜன பெரமுன கட்சியின் நிழல் அரசாங்கத்தை' அமைத்துக் கொள்வதில் ராஜபக்ச குடும்பமும் ஆளும் வர்க்கமும் வெற்றியும் பெற்றுள்ளனர்.

அதாவது 'புதிய போத்தலில் பழைய வைன்' என்பதற்கப் பதிலாக ' பழைய போத்தல் பழைய வைன்' கதையாகவே உள்ளது. அதற்கும் அப்பால் ஒருபடி மேல் போய் 'கோட்டா கோ கம' அரசியல் கருத்தியலுக்குச் சொந்தக்காரர்கள் கட்சியை உருவாக்கி 'ஜனநாயக மரபுக்குள் தமது அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்ள முன்வர வேண்டுமென்றும் அழைப்பு விடுக்கப்படுகின்றது.

அதாவது ராஜபக்சர்களினதும் அவர்கள் சார்ந்த அரசியல் அணியினரும் தமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்தும் வியூகங்களை வகுப்பதையே தென்னிலங்கை அரசியலில் காணக் கூடியதாக இருக்கின்றது.

எனது முந்தைய கட்டுரையில் 'கோட்டா கோ கம' போராட்டம் என்பது 'தேநீர் கோப்பை சூறாவளி' அல்ல என்பதை ராஜபக்சர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென குறிப்பிட்டிருந்தேன்.

இந்த உண்மையை உணராது 'கோட்டா கோ கமவில்'கைவைக்கப்போய் கையைச் சுட்டுக் கொண்டுள்ளனர். 'கோட்டா கோ கம' வியாழக்கிழமையுடன் ( 26.05.2022) 48 நாட்களை எட்டியுள்ள நிலையிலும் போராட்டத்தின் வீரியம் குறைந்ததாக இல்லை.

இந்த இளைஞர் யுவதிகள் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பாக பல அங்கத்துவ அமைப்புக்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் சுமார் 60 சிவில் அமைப்புக்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.

அதற்கும் அப்பால் 200 க்கும் மேற்பட்டவர்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு பின் வரும் கோரிக்கைகளை வடிவமைத்துள்ளனர்.

'கோட்டா கோ கம' போராட்டக்கள இளைஞர் யுவதிகளின் கோரிக்கை இதோ

1.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச ஆட்சி உடனடியாக அதிகாரத்தை கைவிட வேண்டும்.

2.இராஜினாமா செய்த பின்னர் ஆட்சியில் உள்ளவர்கள் இலங்கையின் ஆட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியில் எந்தவொரு தேவையற்ற செல்வாக்கையும் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

3.தேசத்தை மீட்சியின் பாதையில் கொண்டு செல்ல ஒரு இடைக்கால அரசாங்கம் தீர்மானிக்கப்பட்ட காலத்திற்கு (18 மாதங்களுக்கு ) நிறுவப்பட வேண்டும்.

4.அரசியலமைப்புச் சட்டத்தில் 20A ஒழிப்பு போன்ற அத்தியாவசியத் திருத்தங்கள் கூடிய விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.

5. தற்போதைய நெருக்கடியை நிர்வகிக்க அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மற்றும் அனைத்து செயல்முறைகளும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

6.நிலவும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் மனிதாபிமான நெருக்கடியாக மாறியுள்ளது. எனவே தற்போது நிலவும் நெருக்கடிகளைத் தீர்க்க குறுகிய நடுத்தர மற்றும் நீண்ட கால தீர்வுகள் தேவை.

7. தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும். மற்றும் சட்டப்பூர்வ வழிகளில் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை மீட்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

8. நாட்டின் அனைத்து குடிமக்கள் மற்றும் பார்வையாளர்களின் உரிமைகளை மதிக்க சட்டத்தின் ஆட்சி உடனடியாக மீண்டும் நிறுவப்பட வேண்டும்

9. இலங்கையின் அரசியலமைப்பில் அனைத்து பிரஜைகளுக்கும் வாழ்வதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக உள்ளடக்கவும். (இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அது வாழ்வதற்கான உரிமை பற்றிய விதிகளைப் பின்பற்றவும்)

10. இடைக்கால அரசாங்கம் கலைக்கப்பட்ட பின்னர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

[HDPH9[

இலங்கைக்கு சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யூ போன்ற ஒரு தலைவரே தேவை

இலங்கைக்கு தேவை ஒரு லீ குவான் யூ ரணில் மாறுவாரா? | Will Sri Lanka Need A Lee Kuan Yew

அடுத்து என்ன? இலங்கையின் இளைஞர் யுவதிகள் மற்றும் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிதர்சனமாக்க இலங்கைக்கு சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யூ போன்ற ஒரு தலைவரே தேவை. அவ்வாறான ஒரு தலைவரை காணமுடியாதிருப்பது இலங்கைக்கே உரித்தான அரசியல் சாபக் கேடாகும்.

இலங்கையின் தேச பிதா என போற்றப்படும் சேனநாயக்காவில் இருந்து எஸ்.டபிள்யூ.ஆர் .பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச வரை அனைத்து தலைவர்களும் இனவாத சேற்றுக்குள் முளைத்தவர்களே.

எனவே தான் சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யூ இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் ' இலங்கை ஒருபோதும் மீண்டும் ஒன்றிணைக்கப்படாது' எனக் குறிப்பிட்டார். 'சுதந்திர இலங்கை' இனத்துவ அரசியல் மொழி மத ரீதியாக துருவமயப்படுத்தப்பட்டுள்ளதினாலேயே ஒன்றுபட்ட இலங்கை ஒரு போதும் சாத்தியமாகாது என சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யூ குறிப்பிட்டார்.

ஜ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்து தனதும் ஜ.தே.கவினதும் எதிர்கால அரசியல் தலைவிதியை தீர்மானித்தாக வேண்டிய தீர்மானமிக்க கட்டத்திற்குள் நிற்கின்றார். இதற்காக அரசியல் காய்களை நிறையவே நகர்த்தியாக வேண்டும். தனது எதிரிகளை குறிப்பாக சஜித் அணியினரைப் பலவீனப்படுத்தியாக வேண்டும்.

இந்த வேலைப் பளுக்களுக்கு மத்தியில் ராஜபக்சர்களை காப்பாற்றியாக வேண்டும். நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டாக வேண்டும். இவைகளுக்கு மத்தியில் 'கோட்ட கோ கம' இளைஞர்களும் யுவதிகளும் தென்னிலங்கை மக்களும் கொண்டுள்ள 'அரசியல் கருத்தியலுக்கு ஏற்ப புதிய இலங்கையை ' பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் சிருஷ்டிக்க முடியுமா?

ஊழல் மோசடிகள் அற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியுமா? 'கோட்டா கோ கம' இளைஞர்களும் யுவதிகளும் தென்னிலங்கை மக்களும் அரசியல்வாதிகளினால் கொள்ளையிடப்பட்டதாகக் கூறும் பணத்தை நாட்டின் கஜானாவுக்கு மீள கொண்டு வர முடியுமா? பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இவைகள் அனைத்துமே பெரும் சவாலாக முன் நிற்கின்றன.

தனது கட்சியை தூக்கி நிறுத்த வேண்டிய பெரும் சவாலான சுமையை ரணில் விக்ரமசிங்க தனது முதுகில் சுமந்து கொண்டிருக்கின்றார். அவருடைய இரு கால்களிலும் ராஜபக்ச குடும்பமும் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற எண்ணிக்கை பலமும் விலங்கிட்டு நிற்கின்றது.

இந்த ஒரு பின்னணியில் சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யூ போன்றதொரு தலைவராக பிரதமர் பதவியேற்றுள்ள ரணில்விக்ரமசிங்கவால் உருவாக முடியாது.

இலங்கைக்கு தேவை ஒரு லீ குவான் யூ ரணில் மாறுவாரா? | Will Sri Lanka Need A Lee Kuan Yew

மொத்தத்தில் தென்னிலங்கை இன்றைய நிலையிலாவது சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யூ போன்றதொரு தலைவரைத் தேடவில்லையாயின் 21 வது திருத்தம் உட்பட ஒருசில சட்டவாக்க சீர்திருத்தத்துடன் 'கோட்டா கோ கம' இளைஞர்களும் யுவதிகளும் தென்னிலங்கை மக்களும் கனவு கண்டு கொண்டிருக்கின்ற 'புதிய அரசியல் கருத்தியல்' கல்லறைக்குள் முடக்கப்பட்டுவிடும் என்பது உண்மையாகும்.

இன்றைய நிலையில் தென்னிலங்கையில் வீசுகின்ற 'புதிய அரசியல் மாற்றத்திற்கான கருத்தியல் 'தமிழ், முஸ்லிம், மலையக மக்களையும் அணைத்து இணைத்துக் கொண்டு முழு இலங்கையையும் ஒன்றிணைப்பதற்கான கருத்தியலாக மாற்றம் பெற வேண்டும்.

இதுவே 'புதிய இலங்கையின் உதயத்திற்கு'வித்திடுவதாக அமையும். 'கோட்டா கோ கம' இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும், தென்னிலங்கை மக்களுக்கும் வடக்கு கிழக்கு மலையக தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் வேண்டுகோள் இதுதான்.     

கட்டுரையாசிரியர்: மூத்த பத்திரிகையாளர் வீ.தேவராஜ்


தென்னிலங்கை போராட்டக் களத்தில் நிர்வாணமாக்கப்பட்ட நபர்கள்! வெளிவரும் பல உண்மைகள் (Video)


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US