தயார் நிலையில் அரசாங்கம் - இன்றைய தினம் வெளிவந்துள்ள அறிவிப்பு
கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட அல்லது மாகாண மட்டத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கோரிக்கை விடுக்கப்பட்டால் மாவட்ட அல்லது மாகாண மட்டத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படும்.
கோவிட் பரவல் நிலை நாள்தோறும் மாற்றமடைந்து வருகிறது. எனவே அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் தேவையான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது
இந்த நிலையில் நாள்தோறும் மாறிவரும் நிலைமைகளை கருத்திற் கொண்டு செயற்பாடுகளை
மேற்கொள்ள அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளதாது என குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri