ஜனவரி முதல் ரணிலுக்கு அதி உயர் பதவி கிடைக்குமா? அரச தரப்பில் இருந்து வெளிவந்த தகவல்
ரணில் விக்ரமசிங்க(Ranil Wickramasinghe) பிரதமராக நியமிக்கப்படுவார் என வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன(Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, எதிர்வரும் ஜனவரி மாதம் பிரதமர் பதவியல் மாற்றம் ஏற்படும் என்ற கருத்து நிலவுவதாகவும், இதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksha) ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அரசாங்கத்தின் கருத்து என்ன என ஊடகவியலாளரால் கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிடுகையில், நீங்கள் குறிப்பிடும் செய்தி உண்மைக்கு புறம்பானது மற்றும் எந்த அடிப்படையும் இல்லாதது என தெரிவித்துள்ளார்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
