இனிவரும் நாட்களில் மாலை வேளைகளில் மின் தடை ஏற்பட்டால் சீர்செய்யப்படாது என அறிவிப்பு (Video)
இனிவரும் நாட்களில் மாலை 4.15 மணிக்கு பின்னர் மின் தடை ஏற்பட்டால் அது சீர்செய்யப்படாது என மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு (Soumya Kumaravadu) தெரிவித்துள்ளார்.
சட்டத்தை மதிக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தற்போது சட்டத்தை மதிக்கும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். நாட்டில் சட்டப்படி செயல்படுவது தண்டனைக்குரிய குற்றமாகிவிட்டது.
நாம் இன்று வரை சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனினும் 4.15 ன் பின்னர் வழமையான பணியில் இருந்து விலகியிருந்தாலும் மின் தடை ஏற்பட்டால் அதனை சீர் செய்தோம்.
நேற்று முன்தினம் ஏற்பட்ட மின் தடையையும் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களில் சீர்செய்தோம். இன்று முதல் 4.15 க்கு பின்னர் மின் தடை ஏற்பட்டால் நாம் தலையிடப் போவதில்லை.
இது நாட்டின் எதிர்காலத்தை முன்னிட்டு எடுத்த நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
