சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்..!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் முறியடிப்பார் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதற்கான திறன் அவரிடம் இருப்பதாகவும் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
120 ஓட்டங்கள்
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் நேற்று 120 ஓட்டங்களை எடுத்தபோது, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பொண்டிங்கின் 13,378 என்ற ஓட்டங்களை அவர் முந்திச்சென்றார்.
இதற்கு முன்னர் அவர் இந்தியாவின் ராகுல் டிராவிட் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸின் அதிக ஓட்ட சாதனைகளையும் அவர் முறியடித்தார்.
இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் வீரரான டெண்டுல்கர்; 2013 இல் ஓய்வுப்பெறும்போது சாதனையாக விட்டுச்சென்ற 15,921 டெஸ்ட் ஓட்டங்களை தற்போது 34 வயதாகும் ஜோ ரூட் முறியடிப்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்



