நீதிமன்றத்தில் முன்னிலையாகும் டக்ளஸ்: பிணை கிடைக்குமா?
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மீண்டும் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இன்றைய தினம்(09.01.2026) பாதுகாப்பு மற்றும் மருத்துவ விவகாரங்களைக் காரணம் காட்டி டக்ளஸ் தேவானந்தாவைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விரிவான விவாதத்தை மன்றில் சமர்ப்பணம் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
டக்ளஸுக்கு பிணை கிடைக்குமா
இதற்கிடையில், டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு நீதவான் நீதிமன்றத்தில் பிணை அனுமதி கிடைப்பது பெரும்பாலும் சாத்தியமற்றது என்றும் சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீதவான் நீதிமன்றத்தில் முதல் கட்டமாகப் பிணைக்கான கோரிக்கையை முன்வைத்து பார்த்த பின்னரே, அடுத்த கட்டமாக மேல் நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தாவிற்கான பிணை மனுத் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.