ரெலோ கூட்டமைப்பிலிருந்து வெளியேறினால் சந்தோசமாக இருக்கும்: சுமந்திரன்

Government Vavuniya Sumanthiran Tamil Nation Alliance
By Thileepan Mar 31, 2022 01:14 PM GMT
Report

ரெலோ தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறினால் சந்தோசமாக இருக்கும், எமது கட்சியில் பலருக்கு நீண்ட கால எதிர்பார்ப்பே இவர்கள் எப்போது போவார்கள் என்பதே என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தந்தை செல்வாவின் 124ஆவது பிறந்தநாள் நிகழ்வின் பின்னர் தமிழரசு கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் 'கடந்த காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு தமிழரசுக்கட்சியை விமர்சித்து பின்னர் வெளியேறியது அதேபோன்றதான நிலையில் தற்போது ரெலோ காணப்படுகின்றது.

எனவே ரெலோவும் வெளியேறிவிடும் என்ற அச்சம் உங்களுக்கு உள்ளதா? எனக் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

''ஏன் அவர்கள் வெளியேறிவிடுவர்கள் என்று அச்சமாக இருக்க வேண்டும். அது சந்தோசமாகவும் இருக்கலாம்தானே. எமது கட்சியில் பலருக்கு நீண்ட காலமான எதிர்பார்ப்பு இவர்கள் எப்போது போவார்கள் என்பது.

எனினும் நாங்கள் தமிழ் மக்களை பிரதிநிதிதுவப்படுத்தும் கட்சிகளில் பிளவு இருக்கக்கூடாது. எல்லோரும் சேர்ந்து இயங்குவது எமது மக்களுக்குப் பலமான விடயம் என்பதனால் நாங்கள் எல்லோருடனும் சேர்ந்து பயணிக்கின்றோம்.

இன்று அரசாங்கத்துடன் தமிழ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் சூழ்நிலையில் ரெலோ மட்டுமல்ல வெளியில் உள்ள ஈ.பி.ஆர்.எல.எப், விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியாகட்டும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாகட்டும் எல்லோரும் இதற்கு இணங்கி ஒன்றாகச் சேர்ந்து நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை அரசாங்கத்துக்கு முன் வைக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான கோரிக்கை.

இதனைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் என்ற வகையிலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் என்றவகையிலும் இந்த அழைப்பை விடுக்கின்றேன். நாங்கள் ஆயதப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தவும் இல்லை. காட்டிக்கொடுக்கவும் இல்லை. ஆயதப்போராட்டத்தினை நேரடியாகவே காட்டிக்கொடுத்தவர்கள் பலர் நேரடியாகவே கொலை செய்து இன்று தாங்கள்தான் விடுதலைப்புலிகளின் பிரதான ஆதரவாளர்கள்போல் காட்டிக்கொண்டு திரிகின்றனர்.

அதில் மக்களுக்குத் தெளிவு இருக்க வேண்டும். எனக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என்பது ஆயுத போராட்டத்திற்கு எதிரான கூற்று அல்ல.

எனக்கு நம்பிக்கை இல்லை என்பதேதான். ஆனால் அந்த ஆயுத போராட்டம் நடந்த காலத்திலேயே அதனை முன்னின்று நடத்தியவர்களைக் காட்டிக்கொடுத்து ஆயுதத்தை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பாமல் தங்களுடைய சொந்த போராளிகளுக்கு எதிராகச் சகோதர இயக்கங்களுக்கு எதிராகத் திருப்பியவர்கள் இன்று தாம் விடுதலைப்புலிகளுக்குச் சார்பாக இயங்கியவர்களைப் போலப் பொய்யாக வேடம் போட்டுத் திரிகின்றனர்.

இதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறிசபாரத்தினமும் பிரபாகரனும் இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்திருப்பார்களோ அதனையே தாம் செய்தோம் என்று அண்மையில் எங்களோடு பேச்சுக்கு வரமாட்டோம் என பகிஷ்கரித்த இயக்கத்தின் தலைவர் சொல்லியிருந்தார்.

பிரபாகரனும் சிறிசபாரத்தினமும் ஒன்றாகப் பயணித்தவர்கள் போல கூறியிருந்தார். ஆனால் தந்தை செல்வா இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்திருப்பாரோ அதனையே நாம் செய்தோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US