கிளிநொச்சியில் காட்டுயானைகளின் அட்டகாசம்.. உயிராபத்து குறித்து பொதுமக்கள் கோரிக்கை
கிளிநொச்சி - அக்கராயன் பிரதேசத்தில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் தனது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டியதுடன் உயிராபத்துகளையும் எதிர்கொள்ளும் அபாய நிலை காணப்படுவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அக்கராயன்குளம் பிரதேசத்துக்குட்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு, கெங்காதரன் குடியிருப்பு, மணியங்குளம் விநாயகர் குடியிருப்பு, கண்ணகைபுரம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாதிக்கப்படும் வாழ்வாதாரம்
நாளாந்தம் தங்களது கிராமங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து பெருமளவில் பயன் தரு தென்னைமரங்களையும் ஏனைய மரங்களையும் அழித்து வருவதாகவும் குறிப்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கை மற்றும் ஏனைய உப உணவு செய்கைகளையும் அழித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைய நாட்களில் குறித்த கிராமங்களில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இவ்வாறு தங்களது வாழ்வாதாரம் ஒரு புறம் அழிக்கப்படுவதுடன் உயிர் அச்சுறுத்தல்களை எதிர் கொள்ள வேண்டிய ஒரு அபாய நிலை காணப்படுவதாகவும் குறித்த பிரதேச மக்களும் விவசாயிகளும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan