பாடசாலை ஒன்றின் மீது காட்டு யானைகள் தாக்குதல்
கந்தளாய் - சீனிபுர பகுதியில் அமைந்துள்ள பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் மீது இன்று (30.04.2026) அதிகாலை 4 மணியளவில் காட்டு யானைகள் நடத்திய தாக்குதலில் மூன்று வகுப்பறைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
யானைகளின் இந்தத் தாக்குதலினால் பாடசாலையின் 3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் தர வகுப்பறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மர்மமாக இருக்கும் ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள்! குற்றவாளிகளாக சிறைசென்று புலனாய்வாளர்களாக வெளியில் வந்த அதிசயம்
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்
இதனால் பாடசாலை கட்டிடச் சுவர்கள் மற்றும் தளபாடங்கள், மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் மற்றும் அலுவலக அலுமாரிகள், கணினிகள் மற்றும் குடிநீர் விநியோகத் தொகுதி (நீர் தாங்கி), வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன.

இதையடுத்து, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அவர்கள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு கற்றல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வரும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri