மருத்துவமனையில் இருந்து வெளியேறிய கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பாணந்துறையில் கணவர் மருத்துவமனையில் இருந்தபோது, கையொப்பத்தை போலியாக தயாரித்து முச்சக்கர வண்டியை விற்றதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண், மொரோந்துடுவ, கோனதுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது கணவர் மருத்துவமனையில், இருந்தபோது, வீட்டிலிருந்து முச்சக்கர வண்டியை யாரோ திருடிச் சென்றதாக முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலி கையொப்பம்
அதற்கமைய, விசாரணையின் போது, பண்டாரகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையின் போது, முறைப்பாட்டாளரின் மனைவி போலி கையொப்பத்தை பயன்படுத்தி முச்சக்கர வண்டியை விற்றிருப்பது தெரியவந்தது.
சந்தேக நபரான பெண்ணை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan