வெளிநாட்டில் மனைவி - கொழும்பில் கணவன் எடுத்த விபரீத முடிவு
கொழும்பின் புறநகர் பகுதியான ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக கணவன் - மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பணப் பிரச்சினை
25 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஒரு வருடத்துக்கும் மேலாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவரின் மனைவி, 6 மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்தார். எனினும் பணப் பிரச்சினை காரணமாக மீண்டும் மனைவி வெளிநாடு சென்றுள்ளார்.
இந்நிலையில், பணப்பிரச்சினைக்காக வெளிநாட்டில் உள்ள மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.