கொழும்பில் கைக்குண்டு பரபரப்பு ஏன்? கைது செய்யப்பட்டவர் வெளியிட்ட தகவல்
கொழும்பு, நாரஹேன்பிட்டியிலுள்ள லங்கா வைத்தியசாலையின் கழிப்பறையில் இருந்து நேற்று கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கமைய, அந்த கைக்குண்டு தொடர்பில் நேற்றைய தினம் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவரே இந்த கைக்குண்டை வைத்துள்ளார் என தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைக்குண்டு வைத்துவிட்டு அது தொடர்பில் அவரே தகவல் வழங்க நடவடிக்கை எடுத்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவ்வாறு துப்பு வழங்கினால் வைத்தியசாலையிடம் இருந்து பணப்பரிசு பெற்று கொள்ள முடியும் என்ற நோக்கத்தில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதென தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர் திருகோணமலை உப்புவெளியைச் சேர்ந்த 26 வயது இளைஞன் எனத் தெரிய வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri
