யாரும் அச்சம் கொள்ள வேண்டாம், நான் மீண்டும் வருவேன்! மகிந்த அதிரடி அறிவிப்பு
எதற்கும் பயப்பட வேண்டாம், நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் நேற்று முதல் தடவையாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இதன் போது கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச தனது மீள் அரசியல் பிரவேசம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இந்த கூட்டம் நடைபெற்றது.
மே மாதம் 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்து அரசியல் நடவடிக்கையில் இருந்து ஒதுங்கியிருந்தார். எனினும் மீண்டும் அரசியல் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அவர் நேற்று தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்திற்கு வந்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்த ராஜபக்சவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். மகிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அண்மையில் வெளியான செய்திகள் குறித்தும் வினவியுள்ளனர்.
“நானும் வீட்டிலிருந்து அந்த செய்திகளைப் பார்த்தேன். அவை அப்பட்டமான பொய்கள். நான் நலமாக உள்ளேன். அரசியல் பணிகள் வழக்கம் போல் தொடங்குவேன். எதற்கும் பயப்பட வேண்டாம்” என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 4 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan