ஓமானிடம் ஏன் கடன் பெற்றுக்கொள்ளவில்லை! அரசாங்கம் விளக்கம்
ஓமானிடம் ஏன் கடன் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறித்து அரசாங்கம் அதிகாரபூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.
எரிபொருள் கொள்வனவு செய்யும் நோக்கில் அரசாங்கம், 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை ஓமானிடம் கோரியிருந்தது.
எனினும், ஓமானிய அரசாங்கம் விதித்த நிபந்தனைகளின் காரணமாக இந்த கடன் தொகையை அரசாங்கம் பெற்றுக்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டலஸ் அழப்பெரும இந்த விடயத்தை ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய செலாவணி நெருக்கடி நிலைமை காரணமாக கடந்த 2021ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஓமானிடம் கடன் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
கடனுக்கான வட்டியில் சலுகை வழங்குவதற்கு எண்ணெய் பற்றிய தேடுதல்களை மேற்கோள்ள ஓர் இடத்தை ஒதுக்கித் தருமாறு இலங்கையிடம் ஓமான் கோரியிருந்தது.
எனினும் இந்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
